shadow

எய்ம்ஸ் மருத்துவமனைப் பணி வேலை வேண்டுமா?

ஆந்திரப் பிரதேச மாநிலம் மங்கலகிரியிலும், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் லேப் டெக்னீஷியன், எழுத்தர், காசாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட குரூப் பி, சி பதவிகளுக்கான 60 காலிப் பணியிடங்கள் (தலா 30) நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:

பெரும்பாலான பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

குறைந்தபட்ச வயது 18, அதிகப்பட்ச வயது 45. பதவிகளுக்கு ஏற்ப வயதுத் தகுதி மாறுபடுகிறது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினருக்கும், ஓ.பி.சி.யினருக்கும் ரூ.1,000., பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணமில்லை. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க:

உரிய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.aiimsraipur.edu.in என்னும் இணையதளத்தில் 18.06.2018 மாலை ஐந்து மணிவரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: //goo.gl/KSk6rv (மங்கலகிரி) //goo.gl/YW9fXd (நாக்பூர்)

சௌத் இந்தியன் வங்கியில் அதிகாரிப் பணி

கேரள மாநிலம் திருச்சூரை மையமாகக் கொண்டு செயல்படும் சௌத் இந்தியன் வங்கியில் புரோபேஷனரி ஆபீசர் பணிகளுக்கான 150 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறலாம்.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் (60 சதவீத மதிப்பெண்களுடன்) பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

31.12.2017 அன்று 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை உண்டு

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினருக்கு ரூ. 800, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200. கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. உண்டு.

விண்ணப்பிக்க:

உரிய தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் //www.southindianbank.com/ என்னும் இணையதளத்தில் மே 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு:

ஜூன் 2018 (மாறுதலுக்கு உட்பட்டது).

இறுதி நாள்:

25.05.2018

கூடுதல் விவரங்களுக்கு: //goo.gl/CDUvWR

மேலாண்மைப் பயிற்சியாளர் பதவி

விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் (ராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட்), மனிதவளத் துறையிலும் மார்க்கெட்டிங் துறையிலும் மேலாண்மைப் பயிற்சியாளர் பதவிக்கான 14 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டுத் தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி:

உச்சபட்ச வயது 27 (01.02.2018 அன்று). இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கும் ஓபிசியினருக்கும் ரூ.500. மாற்றுத்திறனாளிகளுக்கும் எஸ்.சி, எஸ்.டி.யினருக்கும் ரூ.100. விண்ணப்பக் கட்டணத்துக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

உரிய தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் www.vizagsteel.com என்னும் இணையதளத்தில் ஜூன் 25 முதல் ஜூலை 16வரை விண்ணப்பிக்கலாம். 2018 ஜூலை 8 அன்று நடைபெறும் யூ.ஜி.சி.-நெட் ஜூலை 2018 தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் மாத்திரமே இந்தப் பணிகளுக்குத் தகுதியுடையவராகக் கருதப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: //goo.gl/JYwXGX

Leave a Reply