shadow

எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் முக்கிய அறிக்கை

அதிமுகவை உருவாக்கிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் வரும் 17ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களான ஓ,பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளனர்.

இதன்படி எம்ஜிஆரின் 102வது பிறந்தநாளையொட்டி ஜன.18ம் தேதி முதல் 20 வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும், தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, அந்தமானில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும், அதிமுக எம்எல்ஏக்கள் ஆங்காங்கே நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply