shadow

என் வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சியான நாள்: ஸ்டெர்லைட் தடை குறித்து வைகோ

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்ததோடு, இதுகுறித்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறித்தியது

இந்த நிலையில் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ஆரம்பம் முதலே ஆலைக்கு எதிராக வாதாடி வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று வெளியான தீர்ப்பு குறித்து கருத்து கூறியபோது, ‘என் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள் இன்றுதான் என்று கூறியுள்ளார். மேலும் நீதிமன்றம் என்னுடைய வாதத்தை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் உண்மைகளை மறைத்தது என்றும், ஸ்டெர்லைட்டின் கூலிப்படையாக தமிழக அதிமுக அரசு செயல்பட்டது என்றும் வைகோ தெரிவித்தார்.

இருப்பினும் வைகோவின் இந்த மகிழ்ச்சி நீடிக்குமா? என்பது சென்னை நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து தெரியவரும்

Leave a Reply