shadow

என்.ஜி.கே டீசரை வெளியிடும் பிரபலம் யார் தெரியுமா?

கோலிவுட் திரையுலகில் தற்போது ஒரு பிரபல நடிகரின் டீசர்,டிரைலர், ஃபர்ஸ்ட்லுக் ஆகியவற்றை இன்னொரு பிரபல நடிகர் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவது வழக்கமாகி வருகிறது.

அந்த வகையில்நடிகர் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜிகே திரைப்படத்தின் டீசரை நாளை அதாவது காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி சூர்யாவே தனது டுவிட்டரில் வெளியிடவுள்ளார். இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை செல்வாகவன் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது

 

Leave a Reply