shadow

எச்சில் ஊறவைக்கும் செட்டிநாடு வத்தக்குழம்பு செய்வது எப்படி தெரியுமா?

என்னென்ன தேவை

வறுத்து அரைக்கத் தேவையானவை

தனியா – 5 டீஸ்பூன்

கடலைப் பருப்பு – அரை கப்

மிளகாய் வற்றல் – 7

வெந்தயம் – 3 டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் – கால் கப்

தாளிக்கத் தேவையானவை

சின்ன வெங்காயம் – 10

தக்காளி – 3

மொச்சைப் பயிர் – அரை கப்

புளி – எலுமிச்சைப் பழ அளவு

மணத்தக்காளி வத்தல் – 5 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

நல்லெண்ணெய் – கால் லிட்டர்

உப்பு – தேவைக்கேற்ப

கடுகு – அரை டீஸ்பூன்

தனி மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு, மிளகாய், வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்பு மொச்சைப் பயிர், மணத்தக்காளி வத்தல் போட்டு வதக்க வேண்டும். பின்பு வறுத்து அரைத்து வைத்துள்ள பொருட்களைப் போட்டு வதக்க வேண்டும். பின்பு கால் கப் நீர் ஊற்றிக் கிளறிவிட வேண்டும். கெட்டியானதும் புளிக்கரைசலை ஊற்ற வேண்டும். பின்பு தனி மிளகாய் போட்டு நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்க வேண்டும். இப்போது சுவையான வத்தக்குழம்பு ரெடி.

Leave a Reply