எங்களை ஸ்டாலின் வீழ்த்திவிட்டார்: பாஜக பிரமுகர் கருத்து

கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார் என்றும், மு.க.ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது என்றும் திருப்பூரில் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் கலந்து பாஜக பிரமுகர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திமுக தலைவர்களை பாஜகவும், பாஜக தலைவர்களையும் திமுகவும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் திடீரென பாஜக பிரமுகர் ஒருவர் திமுக தலைவர் குறித்து பெருமையாக பேசியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் அடுத்த பாஜக தமிழக தலைவர் பட்டியலில் பாஜக பிரமுகர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply