உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 27-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் வரை ஊரக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக் கூடாது என சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர் ஊரக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக வாக்கு எண்ண தடை இல்லை என சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது. அதோடு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் செந்தில் ஆறுமுகம் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

இதனை அடுத்து தற்போது நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் திட்டமிட்டபடி ஜனவரி இரண்டாம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply