shadow

உள்ளாட்சி தேர்தல் தேதி: இன்று அட்டவணையை தாக்கல் செய்கிறது தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தல் தேதியை ஆகஸ்ட் 6ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்புக்கு தேர்தல் ஆணையர் ஆளாக வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் கடுமையான உத்தரவிட்டிருப்பதால் இன்று உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் வார்டு வரையறை பட்டியல், இட ஒதுக்கீடு பட்டியல் தயாரிப்பு ஆகிய பணிகளை காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி ஆகிய மாதங்கள் நடத்தும் வகையில் தேர்தல் ஆணையம் அட்டவணையை இன்று சென்னைக் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உள்ளாட்சி தேர்தல் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக மற்றும் தினகரன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர்களின் புதிய கட்சிகளுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல், அட்டவணை, சென்னை ஐகோர்ட், localbody election, chennai highcourt, time table

Localbody election time table today announced?

Leave a Reply