உலக வங்கியின் தலைவராக இந்திய பெண் நியமனம்

உலக வங்கியின் தலைமை நிதி அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநரான அன்சுலா காந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய பெண் ஒருவர் உலக வங்கியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இயங்கி வரும் உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அலுவலராக அன்சுலா காந்த் நியமிக்கப்பட்டிருப்பதாக, உலக வங்கி குழுமத் தலைவர் டேவிட் மல்பாஸ் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த அன்சுலா காந்த் உலக வங்கியில் தனது சிறப்பான சேவையை தொடர்வார் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தஅன்சுலா காந்த் கடந்த 1983ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் இணைந்து தலைமைப் பொது மேலாளர், துணை நிர்வாக இயக்குநர், தேசிய பங்குச் சந்தை பங்குதாரர் இயக்குநர் என படிப்படியாக புரமோஷன் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply