20,504,855 ஆக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு 20,504,855 ஆக உயர்வு என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை உலகம் முழுக்க 744,366 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர். உலக அளவில் 13,422,539 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவில் மட்டும் 5,303,977 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவில் மட்டும் இதுவரை 167,753 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளதாகவும் தெரிகிறது

அமெரிக்காவை அடுத்து பிரேசில் நாட்டில் 3,112,393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 103,099 என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் 2,328,405 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், 46,188 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply