shadow

உலகில் அதிகம் பயன்படுத்தும் செயலி இதுதானாம்

தற்கால டெக்னாலஜி உலகில் செயலிகள் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த செயலிகளுக்குள் எந்த செயலி மக்களுக்கு அதிக நன்மை தருகிறது என்ற போட்டியும் ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில் உலகில் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் செயலிகள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இதுகுறித்து ஃபோர்ப்ஸ் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஆப்டோப்பியா என்னும் அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட தகவல்களின்படி கடந்த மூன்று மாதங்களில் உலக மக்கள் வாட்ஸ்அப் செயலியை மட்டும் சுமார் 8500 கோடி நிமிடங்கள் பயன்படுத்தியுள்ளதகவும், இதேபோன்று ஃபேஸ்புக் செயலியை சுமார் 3000 கோடி நிமிடங்கள் பயன்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

உலகளவில் குறுந்தகவல் அனுப்ப மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ஆப்டோப்பியா செய்தி தொடர்பாளர் ஆடம் பிளாக்கர் தெரிவித்தார். தகவல் பரிமாற்ற செயலிகளில் மக்கள் அதிக நேரம் செலவழித்து உள்ளனர் என பிளாக்கர் மேலும் தெரிவித்தார்.
உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 10 செயலிகள் பட்டியல் பின்வருமாறு..,

வாட்ஸ்அப், வீசாட், ஃபேஸ்புக், மெசன்ஜர், பன்டோரா, யூடியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் மேப்ஸ் மற்றும் ஸ்பாடிஃபை போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் அதிக நேரம் பயன்படுத்தப்பட்ட பத்து செயலிகளில் ஃபேஸ்புக் மெசன்ஜர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்றவை இடம்பிடித்திருக்கின்றன. கூகுளின் யூடியூப் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்றவையும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் முதன்மை இடம் பிடித்துள்ளன.

Leave a Reply