shadow

உலகின் முன்னணி இடத்தை பிடித்த ரெனால்ட்-நிசான் கூட்டணி

ஜப்பானை சேர்ந்த நிசான் மோட்டார் கோ மற்றும் பிரான்ஸ் நாட்டின் ரெனால்ட் கூட்டணி சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

நிசான் மற்றும் ரெனால்ட் கூட்டணியின் கீழ் வரும் மிட்சுபிஷி மோட்டார்ஸ் கார்ப் சர்வதேச சந்தையில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை மட்டும் 5,268,079 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இதே காலகட்டததில் 5,155,600 வாகனங்களையும், டொயோட்டா மோட்டார் கார்ப் 5,129,000 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கீழ் ஆடி மற்றும் லம்போர்கினி உலகின் அதிகம் விற்பனை செய்த ஆட்டோமொபைல் நிறுவனமான முதல் முறையாக இடம்பிடித்துள்ளது. அமெரிக்க போட்டியாளரான ஜெனரல் மோட்டார்ஸ் கடந்த காலகட்டங்களில் முன்னணியில் இருந்த நிலையில், இம்முறை 47 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

எமிஷன் சோதனைகளில் ஊழல் செய்ததைத் தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. எனினும் சீன சந்தைகளில் விற்பனை எவ்வித இடையூறையும் சந்திக்கவில்லை. டொயோட்டா நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ்-ஐ முந்தியுள்ளது.

ரெனால்ட்-நிசான் கூட்டணியின் கார்லோஸ் கோஸ் கூறும் போது, ‘தொடர்ந்து விற்பனையில் சாதனை செய்வோம்’ என தெரிவித்தள்ளார். இந்த கூட்டணி சார்பில் X-டிரெயில், அல்டிமா மற்றும் கியூஷ்கை உள்ளிட்ட மாடல்களை தயாரித்து வருகிறது.

Leave a Reply