shadow

உலகின் மிக விலையுயர்ந்த வைரம்: ரூ.346 கோடிக்கு விற்பனையானது

வைரங்கள் என்றாலே விலையுயர்ந்தது என்பது அனைவரும் அறிந்திருக்கும் நிலையில் ஒரே ஒரு வைரம் ரூ.346 கோடிக்கு விற்பனையாகியுள்ளது அனைவரையும் அதிர செய்துள்ளது.

கனடாவில் உள்ள லூகாரா டயமண்ட் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் 1109 கேரட் தன்மையுள்ள உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் ஒன்றை சமீபத்தில் $53 மில்லியனுக்கு விற்பனை செய்துள்ளது. இது இந்திய ரூபாயில் ரூ.346 கோடிக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரம் 2.5 முதல் 3 பில்லியன் வருடங்கள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரம் போட்ஸ்வானியா என்ற நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரத்திற்கு ‘நம் விளக்கு’ என்ற பொருள்படி ‘Our Light” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply