shadow

உலகின் மதிப்பு மிகுந்த நாடுகளின் பட்டியல். கனடா முதலிடம், ஈராக் கடைசி இடம்

canadaஉலகில் உள்ள நாடுகளில் மதிப்பு மிகுந்த நாடு எது? என்ற சர்வே ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்றை எடுத்துள்ளது. 55 நாடுகளை இந்த சர்வேயில் இணைத்துள்ள இந்த நிறுவனம் நேற்று தனது முடிவை இணையதளத்தின் மூலம் அறிவித்துள்ளது. இதன்படி உலகின் மதிப்பு மிகுந்த நாடுகளில் முதலிடைத்தை கனடா பிடித்துள்ளது. ஒரு நாட்டின் அரசு, பொருளாதார நிலை மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டதாக அந்த தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 33-வது இடம் கிடைத்துள்ளது. சீனா 46வது இடத்திலும், பாகிஸ்தான் 53வது இடத்திலும் உள்ளன. ஈரான், ஈராக் ஆகியவை 54 மற்றும் 55வது இடங்களில் இருக்கின்றன. இந்தியர்களிடம் நடத்தப்பட்ட சர்வேயில் அவர்கள் தங்களது நாடு குறித்து மிகவும் உயர்வாகவும், பெருமையாகவும் கருதுவது தெரியவந்துள்ளது.

55 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த சர்வேயின்போது 48 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. முதல் இடத்தில் இருக்கும் கனடாவை தொடர்ந்து நார்வே 2வது இடத்திலும், சுவீடன் 3வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 4வது இடத்திலும், ஆஸ்திரேலியா 5வது இடத்திலும் மதிப்பு மிக்க நாடுகளாக உள்ளன.

Leave a Reply