shadow

உலகக்கோப்பை ஹாக்கி: பெல்ஜியத்துடன் இன்று இந்தியா மோதல்

உலக கோப்பை ஹாக்கிப் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி பெல்ஜியம் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா வென்று இரண்டாவது வெற்றியை பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய ஹாக்கி அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை இன்று எதிர்கொள்கிறது.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதால் இன்று நடைபெறும் ஆட்டத்திலும் பெல்ஜியம் அணியை வீழ்த்த்ட மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. பெல்ஜியம் அணி தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி இருந்தததால் அந்த அணியும் நம்பிக்கையுடன் உள்ளது. இந்திய-பெல்ஜிய அணிகள் மோதும் ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

 

Leave a Reply