shadow

உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஐசிசி முடிவு

ஒரு கிரிக்கெட் வீரரின் உண்மையான திறமையை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மட்டுமே கணிக்க முடியும் என்று கூறுவதுண்டு. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளுக்கு நாள் வரவேற்பை இழந்து வருகிறது. டி-20 போன்ற போட்டிகளில் ஒரு சில மணிநேரத்தில் முடிவு தெரிந்துவிடுவதால், ஐந்து நாள் காத்திருந்து முடிவை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் தற்போது அக்கறை காட்டுவதில்லை

இந்த நிலையில் டெஸ்ட் போட்டியை மீண்டும் பிரபலப்படுத்த உலகக்கோப்பை டெஸ்ட் போட்டியை நடத்த ஐசிசி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐ.சி.சி.யின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

உலகின் முன்னணி நாடுகள் மட்டும் கலந்து கொள்ளும் இந்த உலகக்கோப்பை டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை சொந்த மைதானத்திலும், வெளிநாட்டிலும் மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். இந்த போட்டிகள் வரும் 2019ஆம் ஆண்டில் நடைபெறும் என தெரிகிறது.

Leave a Reply