உலகக்கோப்பையில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி!

உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காத ஒரே அணியாக இந்திய அணி உள்ளது. நேற்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 268/7 50 ஓவர்கள்

விராத் கோஹ்லி: 72
தோனி: 56
பாண்ட்யா: 46
கே.எல்.ராகுல்: 48

மேற்கிந்திய தீவுகள்: 143/10 34.2 ஓவர்கள்

அம்ரீஸ்: 31
பூரன்: 28
ஹெட்மயர்: 18
காட்ரில்: 14

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி

இந்த வெற்றியால் இந்திய அணி 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply