உறுதிமொழி கடிதம் கொடுத்தால் மட்டுமே மண்ணெண்ணெய்: திடீர் கட்டுப்பாடு

மத்திய அரசு மாநிலத்துக்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ள நிலையில், நியாய விலைக் கடையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் பெற உறுதிமொழிக் கடிதம் மற்றும் காஸ் ரசீது கட்டாயமாக்கப் பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இனிமேல் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்க வருபவர்கள் சமீபத்தில் வாங்கிய காஸ் சிலிண்டருக்கான ரசீது மற்றும் உறுதிமொழி கடிதம் அளிக்க வேண்டும் என்றும், அந்த உறுதிமொழிக் கடிதத்தில், ’எனக்கு காஸ் சிலிண்டர் ஒன்று மட்டுமே உள்ளது. விசாரணையில் எனக்கோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ 2 காஸ் சிலிண்டர்கள் இருப்பது தெரியவந்தால் எனக்கு வழங்கப்பட்ட காஸ் இணைப்பினை ரத்து செய்ய சம்மதிக்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது

இந்த உறுதிமொழிக் கடிதத்தை ரேஷன் கடை விற்பனையாளரிடம் அளிக்க வேண்டும். அதை வாங்கிய பின்னரே ரேஷன் கடைக்காரர் மண்ணெண்ணெய் தருவார்

 

Leave a Reply