உதயநிதி ஸ்டாலின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

டிசம்பர் 27ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்

அதுமட்டுமின்றி இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய ஒரு போஸ்டரையும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நித்யா மேனன். அதிதிராவ் ஹைதி, ஆகிய இரண்டு நாயகிகள் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்

மேலும் இந்த படத்தில் ஆடுகளம் நரேன், சிங்கம்புலி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மிஷ்கின் ஆகிய இருவருக்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply