shadow

உதயநிதி படத்தின் டைட்டிலை அறிவித்த மோகன்லால்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பிரியர்தர்ஷன் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை மலையாள சூப்பர் ஸ்டாரும், பிரியதர்ஷனின் நெருங்கிய நண்பருமான மோகன்லால் தனது டுவிட்டரில் அறிவித்தார். இந்த படத்திற்கு ‘நிமிர்’ என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மலையாலத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘மகேஷிண்டே பிரத்திகரம்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், பார்வதி நாயர், நமீதா பிரமோத் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply