உதயநிதியுடன் தொடர்பா? ஸ்ரீரெட்டி கூறிய அதிர்ச்சி தகவல்

கோலிவுட் மற்றும் டோலிவுட் நட்சத்திரங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கடந்த சில மாதங்களாக அடுக்கடுக்காக கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி, சமீபத்தில் உதயநிதி குறித்தும் ஒரு குற்றச்சாட்டை கூறியதாக ஒருசில சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த ஸ்ரீரெட்டி, ’உதயநிதிக்கும் எனக்கும் தொடர்பு உள்ளதாக சமூக வலைதளத்தில் போலிகணக்குகள் மூலம் பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர் என்றும் அதில் உண்மை இல்லை என்றும் கூறினார்.

மேலும் அதிமுக, திமுக என இரண்டு கட்சிக்கும் தனது ஆதரவு உண்டு என்றும், தன்மீது ஒரு கட்சியின் முத்திரையை யாரும் சுமத்த வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply