shadow

உடைக்கவே முடியாத டிஸ்ப்ளே: சாம்சங் சாதனை

யாராலும் உடைக்கவே முடியாத டிஸ்ப்ளேவை கொண்ட புதிய மாடல் செல்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் நிறுவனம் உடைக்கவே முடியாத, வளையும் தன்மை கொண்ட OLED பேனலை உருவாக்கியுள்ளது. தற்போதை வளையும் டிஸ்ப்ளேக்களை சுற்றி கண்ணாடி பொருத்தப்பட்டு இருப்பதால், அதிக சேதமடையும் போது அவை உடையும் நிலை உள்ளது. புதிய பேனலில் சேர்க்கப்பட்டிருக்கும் உடைக்கமுடியாத மூலக்கூறு பேனலை உறுதியானதாக மாற்றுகிறது.

உடைக்கமுடியாத ஸ்மார்ட்போன் பேனலை UL அன்டர்-ரைட்டர்ஸ் ஆய்வகத்தால் சான்றளிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சம் 6 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை – இது அமெரிக்க ராணுவ தரத்துக்கும் மேல் உறுதியானதாகும்.

புதிய உடைக்கமுடியாத பேனலை ஆட்டோமொபைல், ராணுவ மொபைல் சாதனங்கள், கேம் கன்சோல்கள், டேப்லெட் போன்றவற்றில் பயன்படுத்த முடியும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

தரையில் இருந்து சரியாக 4 அடி உயரத்தில் இருந்து சுமார் 26 முறை தொடர்ச்சியாக கீழே போடப்பட்டது. அதிகபட்சம் 71 டிகிரியும் குறைந்தபட்சம் -32 டிகிரி வெப்ப அளவுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சாம்சங் உடைக்கமுடியாத பேனல் முன்புறம், பக்கவாட்டுகள் மற்றும் ஓரங்களில் எவ்வித சேதமும் இன்றி தொடர்ந்து சீராக இயங்கியதாக நிலையில UL தெரிவித்துள்ளது.

புதிய ஃபோர்டிஃபைடு பிளாஸ்டிக் கண்ணாடிகளை உடைக்கமுடியாது என்பது மட்டுமின்றி இவை எடை குறைவாகவும் வழக்கமான கண்ணாடிகளை போன்றே இருக்கும் என்பதாலும் மின்சாதனங்களில் பயன்படுத்த முடியும் என சாம்சங் டிஸ்ப்ளே பிரிவு தகவல் பரிமாற்ற துறை பொது மேளாலர் ஹோஜுங் கிம் தெரிவித்தார்.

Leave a Reply