ஈரான் மக்களுக்காக பதில் தாக்குதல் நடத்தவில்லை: டிரம்ப் விளக்கம்

ஈரான் நாட்டில் உள்ள ஹார்மஸ்கான் பகுதியில் அமெரிக்காவுக்கு சொந்தமான உளவு பார்க்கும் ஆளில்லா விமானம் ஒன்று நேற்று அனுமதியின்றி பறந்ததாகவும் அதனை தங்கள் நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனை அமெரிக்காவும் உறுதி செய்தது.

இது குறித்து தனது டுவிட்டரில் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும், ஈரான் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதை தொடர்ந்து நாங்கள் 3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், ஆனால் இந்த தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பார்கள் என தெரிய வந்ததால் பதில் தாக்குதல் நடத்தவில்லை என்றும் கூறினார்.

Leave a Reply