shadow

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் வாபஸ் குறித்து பராக் ஒபாமா

ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றது தவறானது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கருத்து கூறியுள்ளார். ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை வாபஸ் பெறும் முடிவு குறித்து அவர் கூறியப்போது ‘ஈரான் அரசு அணுசக்தி ஒப்பந்தத்தை மீறாத நிலையில் இந்த ஒப்பந்தத்தை வாபஸ் பெறுவது என்பது தவறான முடிவு என்றே கருதுவதாகவும், இதுகுறித்து அதிபர் டிரம்ப் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஒபாமா கூறியுள்ளார்.

முன்னதாக ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் டிரம்ப் தனது முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply