shadow

இளம்பிறை மணிமாறனின் கணவன் காலமானார் சிவகுமார் இரங்கல் !

1970 ல் பேச்சாளராக அறிமுகமாகிய இளம்பிறை மணிமாறன் தொடர்ந்து பல மேடைகளில் தமிழ் , ஆங்கிலம் , வடமொழி , மலையாளம் என வெவ்வேறு மொழிகளில் பேசக்கூடிய மிகச்சிறந்த பேச்சாளர். இவர் சிலம்புச்செல்வி , முத்தமிழ் அறிஞர் போன்ற பட்டங்களை பெற்றவர்.

இவர் பேச்சாளர் மட்டுமல்லாமல் சிறந்த எழுத்தாளரும் ஆவார். இவர் 9 புத்தகங்களையும் 2 சிறுநூல்களையும் எழுதியுள்ளார். 27 ஆண்டு பேராசிரியராக பணியாற்றிய இவர் பல மேடைப்பேச்சுகளில் பல நடிகர்களால் மக்களாலும் பாராட்டப்பெற்றவர்.

இந்த நிலையில் இளம்பிறை மணிமாறனின் கணவன் மணிமாறன் நேற்று காலமானார். அவரது உடல் மதுரையில் நேற்று மாலை 6 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்தத மணிமாறன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்து அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று கூறினார். மேலும் 2009-ல் என்னுடைய வீட்டிற்கு வந்தார். நான் முழு கம்பராமாயணத்தையும் 2 மணி நேரம் 10 நிமிடத்தில் கூறினேன். அதைக் கேட்ட அவர் இதைப் பயிற்சி செய்ய எவ்வளவு நாள் ஆனது என்று கேட்டார்கள். ஒரு வருடம் என்றேன். நீங்கள் செய்தது அசுர சாதனை என்று பாராட்டினார். அதேபோல், மஹாபாரதம் பேசும்போதும் மேடையில் அமர்ந்து எனக்கு ஊக்கமளித்தார். அவரின் சாதனைகளுக்கு பின்புலமாகவும், தூணாகவும் இருந்தவர் தான் அவருடைய கணவர் மணிமாறன்.ஈடு செய்யமுடியாத அந்த மாமனிதரை இழந்து வாடும் அவரது மனைவி இளம்பிறை மணிமாறனுக்கும் , அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த வருத்தங்களையும் ஆறுதலையும் கூறிக்கொள்கிறேன் என்று சிவகுமார் கூறினார்.

Leave a Reply