இலங்கை விஜய் ரசிகைகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள், ரசிகைகள் இருப்பது தெரிந்ததே. அந்த வகையில் நமது அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் விஜய் படம் வெளியாகும் தினம் ஒரு திருவிழா போல் கொண்டாடப்படும்

இந்த நிலையில் ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று தமிழகத்தை போலவே இலங்கையிலும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் உள்ள பெண் ரசிகைகளின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் உள்ள நெல்சன் என்ற திரையரங்கில் ‘பிகில்’ திரைப்படத்தின் ஒரு காட்சி முழுக்க முழுக்க பெண்களுக்காகவே திரையிடப்படுகிறது.

இந்த தகவல் இலங்கையில் உள்ள விஜய் ரசிகைகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி என்பதை சொல்லவும் வேண்டுமோ?

Leave a Reply