shadow

இலங்கையில் வரலாறு காணாத மழை: பாராளுமன்றத்திற்கு ஆபத்தா?

இலங்கையில் கடந்த சில வருடங்களாக இல்லாத கனமழை பெய்து வருவதால் அந்நாட்டின் பாராளுமன்ற கட்டிடம் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இலங்கையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக இலங்கை பாராளுமன்ற கட்டிடம் அமைந்துள்ள தியவன்னா ஒயாவின் பகுதியில் நீர்மட்டம் மிக அதிகளவில் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அந்நாட்டின் பாராளுமன்ற பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் பலர் அதிகரித்து வரும் நீர்மட்டத்தை கட்டுப்படுத்த ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வெள்ள நிலைமை ஏற்பட்டால் அதற்கு முகாம் அமைத்து மக்களுக்கு உதவும் வகையில் கடற்படையினர் அந்த பகுதியில் தயார் நிலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply