shadow

இம்ரான்கானின் ‘கழுதை’ பேச்சுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

இங்கிலாந்து நாட்டில் இருந்து இருந்து கடந்த 12ஆம் தேதி முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் நாடு திரும்பியபோது அவரை அவரது கட்சியினர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இதுகுறித்து பேசிய இம்ரான் கான் நவாஸ் ஷரீப்பை விமான நிலையத்தில் வரவேற்க செல்பவர்கள் நிச்சயம் கழுதைகளாக இருக்க வேண்டும் என கூறினார்.

இம்ரான் கானின் சர்ச்சை பேச்சுக்கு ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் எதிரணியினரை முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி இம்ரான் கான் விமர்சிப்பதற்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் ஆணையத்தின் முன் ஆஜராகும்படியும் உத்தரவிட்டு இருந்தது. எனினும், இம்ரான் கானுக்கு பதிலாக அக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான அவான் ஆஜரானார். தேர்தல் முடிந்த பின்னர் இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply