shadow

 astrologyமேஷம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:வைலெட், இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
எதையும் உற்சாகமாக செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகேதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள், பிங்க்
 
 
ராசி குணங்கள்
கடகம்
மற்றவர்களை நம்பி எந்த வேலைகயையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, பச்சை
 
 
ராசி குணங்கள்
கன்னி
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
துலாம்
இன்றையதினம் குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:கிரே, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
தனுசு
சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனம் தொந்தரவு தரும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
மகரம்
எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
மீனம்
இன்றையதினம் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பணவரவு திருப்தி தரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை, மஞ்சள்

Leave a Reply