இன்றைய ராசிபலன்கள் 30/11/2017

மேஷம்
மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். அசதி, சோர்வு வரக்கூடும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 12.52 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
ராசி பலன்கள்

ரிஷபம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
ராசி பலன்கள்

மிதுனம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
ராசி பலன்கள்

கடகம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
ராசி பலன்கள்

சிம்மம்
மதியம் 12.52 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். தடைப்பட்ட வேலைகளை விடாமுயற்சியால் முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
ராசி பலன்கள்

கன்னி
கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல் நலம் சீராகும். புது நட்பு மலரும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத்தில் அமைதி நிலவும். மதியம் 12.52 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கையுடன் செயல்படப் பாருங்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
ராசி பலன்கள்

துலாம்
உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
ராசி பலன்கள்

விருச்சிகம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
ராசி பலன்கள்

தனுசு
ஒரு பக்கம் சோர்வு, களைப்பு என இருந்தாலும் மறுபக்கம் விடா முயற்சி, கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
ராசி பலன்கள்

மகரம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
ராசி பலன்கள்

கும்பம்
சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். சகோதரங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
ராசி பலன்கள்

மீனம்
மதியம் 12.52 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. யோகா, தியானம் என மனம் செல்லும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

Leave a Reply