இன்றைய ராசிபலன்கள் 02/12/2017

மேஷம்
இன்றும் மாலை 4.40 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களைக் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
ராசி பலன்கள்

ரிஷபம்
அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் இருக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். மாலை 4.40 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்வீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ராசி பலன்கள்

மிதுனம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
ராசி பலன்கள்

கடகம்
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி தங்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
ராசி பலன்கள்

சிம்மம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
ராசி பலன்கள்

கன்னி
மாலை 4.40 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
ராசி பலன்கள்

துலாம்
பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் வரும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மாலை 4.40 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
ராசி பலன்கள்

விருச்சிகம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
ராசி பலன்கள்

தனுசு
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
ராசி பலன்கள்

மகரம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
ராசி பலன்கள்

கும்பம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
ராசி பலன்கள்

மீனம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவுக் கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
ராசி பலன்கள்

Leave a Reply