இன்று முதல் தொடங்கியது ரஜினி படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள திரைப்பட்ம் வரும் 10ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இன்று இந்த படத்தின் போட்டோஷூட் நடைபெற்றது. ஆனால் போட்டோஷூட் ரஜினிக்கா? அல்லது நயன்தாராவுக்கா? என்ற தகவல் வெளிவரவில்லை

மேலும் இந்த படத்தில் இரண்டு நாயகிகள் என்று வெளிவந்த செய்தியும் வதந்தியே என்றும், நயன்தாரா மட்டுமே நாயகி என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

முதல்கட்ட படப்பிடிப்பு ஒரு வாரம் மட்டும் மும்பையில் நடைபெறவுள்ளதாகவும், அதன்பின் ஓட்டு போட சென்னை வரும் ரஜினிகாந்த் அதன் பின்னர் மீண்டும் மே மாதம் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply