shadow

இன்று பெரும்பான்மையை நிரூபிப்பாரா கர்நாடகா முதல்வர்?

காங்கிரஸ் கட்சி கொடுத்த ஆதரவு காரணமாக வெறும் 37 எம்.எல்.ஏக்கள் மட்டுமே வைத்துள்ள மஜத கட்சியின் குமாரசாமி, கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் இன்று சட்டசபையில் அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்துள்ளார்.

இன்று பிற்பகல் 12.15 மணிக்கு தற்காலிக சபாநாயகா் கே.ஜி.போபையா தலைமையில் கூடவுள்ள சட்டசபையில் பேரவைத் தலைவருக்கான தோ்தல் நடைபெற உள்ளதாகாகவும், இந்த தோ்தலில் காங்கிரஸ், மஜத கூட்டணி சார்பில் ரமேஷ்குமார், பா.ஜ.க. சார்பில் சுரேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனா்.

இந்த தேர்தலை தொடா்ந்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீா்மானத்தை குமாரசாமி கொண்டுவருவார் என்றும், பின்னர் அந்த தீா்மானம் மீது ஆளும் கட்சி, எதிர்க்கட்சித் தலைவா்கள் பேசுவார்கள் என்றும் அதன் பின்னா் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறாது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெறுவதற்கு தேவையான சட்டமன்ற உறுப்பினா்கள் இருக்கின்றனர் என்றாலும் திடீர் திருப்பம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply