கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த 5 மாதங்களாக கடற்கரைக்குச் செல்ல அனுமதி இல்லாமல் இருந்தது

ஆனால் செப்டம்பர் 1 முதல் பல்வேறு தளர்வுகள் ஏற்பட்டதை அடுத்து ஒரு சிலர் மெரினா உள்பட சில கடற்கரைக்குச் சென்று வருகின்றனர்

ஆனால் கடந்த வாரம் ஞாயிறு அன்று கடற்கரைக்கு வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பியதோடு அபராதமும் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று கடற்கரைக்கு வருபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது

எனவே இன்று கடற்கரைக்குச் எல்லோரும் செல்வதை தவிர்க்கவும் அல்லது இருநூறு ரூபாய் வரை கொண்டு செல்லலாம் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply