ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன

புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள சென்னையும் எட்டாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் மோத உள்ளதால் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 5வது இடத்திற்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது முதலிடத்தில் டெல்லி இரண்டாவது இடத்தில் மும்பை மூன்றாவது இடத்தில் பெங்களூர் நான்காவது இடத்தில் கொல்கத்தா அணி இருக்கும் நிலையில் மீதமுள்ள நான்கு அணிகளும் 6 புள்ளிகளுடன் உள்ளன

எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி 8 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது

ஐந்தாவது இடத்தைப் பிடிக்கப் போவது சென்னையா அல்லது ராஜஸ்தானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply