இன்னும் நான்கே நாட்களில் விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ டீசர்

விஜய்சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் தற்போது விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் ‘சிந்துபாத்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் செக்ண்ட்லுக் மற்றும் டீசர் ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மார்ச் 11ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இத்துடன் விஜய்சேதுபதி, அஞ்சலியின் செகண்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில். யுவன்ஷங்கர் ராஜா இசையில் விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வாசன் மூவீஸ் மற்றும் கே புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

 

 

Leave a Reply