பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. அனேகமாக தமிழகத்தில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த ஆண்டு பாடங்களை நடத்துவது கடினம் என்றும் கூறப்படுகிறது

எனவே இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்களை குறைக்கலாம் என்று ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த கல்வி ஆண்டு தாமதமாக தொடங்குவதால் மாணவர்களுக்கு சுமையை குறைக்கும் வகையில் பாடங்களை குறைப்பது உள்ளிட்ட ஒருசில நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கலாம் என்பது தான் அரசின் திட்டமாக உள்ளது

மேலும் பருவ தேர்வு நடத்தாமல் காலாண்டு அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகள் மற்றும் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் அரசு ஆலோசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply