அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வேலையிழந்து வருமானம் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய விமான துறையை சார்ந்திருக்கும் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், இந்த ஊரடங்கு காலத்தில் ஆசிய அளவில் விமான சேவைகளில் சுமார் 2,20,000 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக அளவில் 6,35,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் விமான சேவையை சார்ந்துள்ள 30 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply