இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியதா பாகிஸ்தான்?

இந்தியாவின் 2வது விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறும் பாகிஸ்தான் ஆதாரத்தை வெளியிடலாமே என்று வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவின் இரண்டாவது விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்ற்ன. உண்மையில் பாகிஸ்தானின் F16 ரக விமானத்தைத்தான் இந்தியா சுட்டு வீழ்த்தியது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கட்டுக்கதைகள் கிளம்பி வரும் நிலையில் இந்தியாவின் 2வது விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறும் பாகிஸ்தான் ஆதாரத்தை வெளியிடுங்கள் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய பாகிஸ்தான் உருவாகிவிட்டதாக கூறும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பயங்கரவாதிகள் மீது புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் ரவீஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்

 

Leave a Reply