shadow

இந்தியா – நியூசிலாந்து 20 ஓவர் போட்டி கண்ணோட்டம்

இந்தியா – நியூசிலாந்து அணிகள் 20 ஓவர் போட்டியில் மோதியது குறித்து சில தகவல்களை காணலாம்.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் 2007 உலககோப்பையில் முதல் முறையாக 20 ஓவரில் மோதின. ஜோகன்ஸ் பர்க்கில் நடந்த இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாக்பூரில் மோதிய ஆட்டத்திலும் இந்தியா தோல்வி அடைந்து இருந்தது. இரு அணிகளும் 6 முறை 20 ஓவர் போட்டியில் மோதின. இதில் அனைத்திலும் நியூசிலாந்தே வெற்றி பெற்று உள்ளது. 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இதனால் நியூசிலாந்துக்கு எதிராக 20 ஓவர் ஆட்டத்தில் இந்தியா முதல் வெற்றியை பெற்று தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணி 190 ரன் குவித்தது அதிகபட்ச ஸ்கோராகும். இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்து இருந்தது.

இந்திய அணி 79 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராகும். நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்தது குறைந்தபட்ச ஸ்கோராகும்.

மேக்குல்லம் 4 ஆட்டத்தில் 261 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அவர் 2012-ம் ஆண்டு சென்னையில் நடந்த ஆட்டத்தில் 91 ரன் எடுத்ததே ஒரு போட்டியின் அதிகபட்ச ரன் ஆகும். அதே ஆட்டத்தில் வீராட்கோலி 70 ரன் எடுத்ததே 2-வது சிறந்த ஸ்கோராக இருக்கிறது.

வெட்டோரி அதிகபட்சமாக 6 விக்கெட் வீழ்த்தி உள்ளார். சான்ட்னெர் 11 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது. சிறந்த பந்துவீச்சு ஆகும்.

Leave a Reply