shadow

இந்தியா-ஆஸ்திரேலியா 2வது டி-20 போட்டி இடமாற்றம்

இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் முடிந்ததும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணை ஏற்கனவே வெளியாகிவிட்டது

இந்தா நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பிப்ரவரி 24ஆம் தேதி பெங்களூரில் 2வது டி-20 போட்டி திடீரென மாற்றப்பட்டுள்ளது. இதே நாளில் பெங்களூருவில் நடைபெறும் விமானப்படை நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதால் இந்த போட்டி 24ம் தேதி பதில் 27ஆம் தேதி நடைபெறும் என்றும் அதேபோல் இந்த போட்டி பெங்களூருக்கு பதிலாக விசாகப்பட்டினத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஒரு மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியா, ஆஸ்திரேலியா, டி-20 போட்டி, பிரதமர் மோடி, இடமாற்றம்,

Leave a Reply