shadow

இந்தியாவில் அறிமுகமாகும் டாடாவின் இரண்டு புதிய கார்கள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகன அறிமுகம் குறித்த தனது திட்டங்களை ரகசியமாக வைத்திருந்த டாடா மோட்டார்ஸ் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் உடைத்திருக்கிறது.

டாடா டியாகோ மற்றும் டிகோர் என இரண்டு வாகனங்களின் எலெக்ட்ரிக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு வாகனங்களும் ஸ்டான்டர்டு ஹேட்ச்பேக் மற்றும் சப்-காம்பேக்ட் செடான் மாடல்களை போன்று காட்சியளிக்கின்றன. புதிய மாடல்களின் புளூ டீகல்கள் மற்றும் முன்பக்க கிரில் EV பேட்ஜிங் கொண்டிருக்கிறது.

உள்புறத்தில் குமிழ் போன்ற கியர்லீவர் வழங்கப்பட்டிருப்பதே எலெக்ட்ரிக் மற்றும் கம்பஷன் இன்ஜின் வெர்ஷன்களில் இருக்கும் ஒற்றை வித்தியாசமாக உள்ளது. இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை புதிய எலெக்ட்ரிக் டிரைவ் சிஸ்டம் எலெக்ட்ரா இ.வி. மூலம் உருவாக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

டியாகோ மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் மாடல்களில் ஏ.சி. இன்டக்ஷன் மோட்டார் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மோட்டார் அதிகபட்சம் 40 பி.ஹெச்.பி. பவர் கொண்டிருக்கிறது. மற்ற சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில், விரைவில் இதுகுறித்த முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டியாகோ மற்றும் டிகோர் இ.வி. மாடல்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சனந்த் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டும் என்றும், இவற்றின் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே துவங்கி சில மாடல்கள் EESL நிறுவனத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு விட்டன. புதிய எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறித்து எவ்வித தகவல்களும் இல்லாத நிலையில், இவற்றின் விலை ரூ.8 முதல் 10 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply