இந்தியன் 2′ ரிலீஸ் தேதி அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’ . இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தை வரும் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

இதனை அடுத்து இந்த படத்தின் கிராபிக்ஸ் உள்பட அனைத்து பணிகளையும் முடித்து 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தயாரிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஷங்கருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டுள்ள ஷங்கர் மின்னல் வேகத்தில் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகளை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த முறை சரியான ரிலீஸ் தேதிகள் இந்தியன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply