‘இந்தியன் 2’ படத்தில் இணைந்த எல்.கே.ஜி நடிகர்

கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் லைகா நிறுவனத்தின் பிரமானமான தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகர் இணைந்துள்ளார். அவர்தான் ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘எல்.கே.ஜி’ திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில் அவர் ‘இந்தியன் 2’ படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவர் நெடுமுடிவேணுவின் உதவியாளராக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

ஏற்கனவே இந்த படத்தில் சித்தார்த், டெல்லி கணேஷ் உள்பட ஒருசில பிரபல நடிகர்கள் இந்த படத்தில் இணைந்துள்ள நிலையில் தற்போது ஆர்.ஜே.பாலாஜியும் இணணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் இரண்டு பாடல்களை கம்போஸ் செய்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

 

Leave a Reply