shadow

‘இந்தியன் 2’ நாயகி குறித்த அதிகாரபூர்வ தகவல்

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது காஜல் அகர்வால் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கமல்ஹாசனுக்கு இந்த படத்திற்காக மேக்கப் டெஸ்ட் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் காஜல் அகர்வாலுக்கு வெளிநாட்டில் மேக்கப் டெஸ்ட் எடுக்க பணிகள் நடந்து வருவதாகவும் இதற்காக காஜல் அகர்வால் விரைவில் வெளிநாடு செல்லவுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வந்துள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ரவிவர்மனும், எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் ஆகிய மூவரும் இணைந்து வசனங்களை எழுதவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply