’இந்தியன் 2’ இசையமைப்பாளர் திடீர் மாற்றமா? அதிர்ச்சி தகவல்

கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும்’இந்தியன் 2’ படத்தில் அனிருத் இசையமைத்து வரும் நிலையில் இந்த படத்தின் இசை அமைப்பாளர் மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அனிருத் இசையமைத்த இரண்டு பாடல்களும் ஷங்கர் மற்றும் கமலஹாசனுக்கு திருப்தி இல்லை என்பதால் இந்த பாடலை சரி செய்யும்படி இருவரும் கூறியதாகவும் இதனையடுத்து இருவரும் திருப்தியடையும் வகையில் 2 பாடல்களை கம்போஸ் செய்யும் முயற்சியில் அனிருத் இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் அனிருத் கம்போஸ் செய்யும் அடுத்த பாடலும் திருப்தி இல்லை என்றால் இசையமைப்பாளரை மாற்ற ஷங்கர் முடிவு செய்திருப்பதாகவும் அனேகமாக ஏஆர் ரகுமான் அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே சங்கரின் மகன் பரிந்துரை செய்ததால் தான் அனிருத் இசை ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அனிருத்தை ஒப்பந்தம் செய்ய ஷங்கருக்கு கொஞ்சமும் விருப்பமில்லை என்றும் கோலிவுட்டில் ஒரு வதந்தி கூறப்பட்டு வருகிறது

Leave a Reply