shadow

இந்தியன் வங்கி கடன் வட்டி விகிதம் குறைப்பு

இந்தியன் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு நாளுக்கான வட்டி விகிதம் 8.15 சதவீதமாகவும், 1 மாதத்துக்கு 8.20 சதவீதமும், 3 மாதத்துக்கு 8.30 சதவீதமும், 6 மாதத்துக்கு 8.40 சதவீதமும். ஒரு வருடத்துக்கு 8.50 சதவீதமும், 3 வருடத்துக்கு 8.70 சதவீதமும் மற்றும் 5 வருடத்துக்கு 8.90 சதவீதம் என்ற வகையில் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வட்டிக் குறைப்பு இம்மாதம் 7 ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply