இந்திக்கு எதிராக டீசர்ட் அணிந்து திரையுலக பிரபலங்கள் சிலர் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது தெரிந்ததே. இதற்கு பின்னணியில் திமுக இருப்பதாகவும் திமுக நிர்வாகி ஒருவரின் பனியன் நிறுவனத்தில் தான் டீசர்ட்டுகள் உருவாக்கப்படதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் திடீரென விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஹிந்தி மொழிக்கு ஆதரவாக டீசர்ட் அணிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

’தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற வாசகம் கொண்ட பனியன் மற்றும் அன்னை மொழியும் முக்கியமானது, அனைத்து மொழியும் முக்கியம் என்ற வாசகங்கள் கொண்ட டி-ஷர்ட்டையும் அவர் அணிந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார்

இந்த புகைப்படங்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply