இதைத்தான் வனிதா அன்னிக்கே சொன்னாங்க! ஷெரினை போட்டு தாக்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் வீட்டில் ஷெரினுக்கும் தர்ஷனுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இந்த காதலில் தர்ஷனுக்கு சிறிதும் உடன்பாடில்லை என்றும் ஆனால் ஷெரின் வலுக்கட்டாயமாக தர்ஷனை காதலித்து வருவதாகவும் வனிதா ஏற்கனவே கூறிய நிலையில் தற்போது கிட்டத்தட்ட அது உண்மையாகியுள்ளது

இன்றைய நிகழ்ச்சியில் ஷெரின் காதல் கடிதம் ஒன்றை எழுத, அந்தக் கடிதம் தர்ஷனுக்குத்தான் என்று தெரிகிறது. இதனை அடுத்து திடீரென ஷெரின் அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போட்டார். மேலும் ஷெரின் அந்த காதல் கடிதத்தை தர்ஷனுக்கு எழுதவில்லை என்றும் பிக்பாஸ்க்கு எழுதியதாகவும் ஒரு சிலர் கணித்து வருகின்றனர். அப்படி என்றால் ஷெரின் ஒரே நேரத்தில் பிக் பாஸ் மற்றும் தர்ஷன் ஆகிய இருவரையும் காதலித்து வருகிறாரா? என்ற கேள்வி எழுகிறது

கவின் இரண்டு பெண்களை காதலித்தால் மட்டும் விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள் ஷெரினை விட்டு வைப்பார்களா? தற்போது ஷெரினையும் போட்டு தாக்கி வருகிறார்கள். ஷெரின் காதல் குறித்து வனிதா சொன்ன முறை வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் அவர் சரியாகத்தான் ஷெரினி கணித்துள்ளார் என்று இப்பொழுது நெட்டிசன்கள் வனிதாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply