இதுதான் வசூல் கணக்கு: இதில் எந்தப்படம் வெற்றிப்படம்

ஒரு திரைப்படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டால் அந்த படம் பெரிய வெற்றியை பெற்றாலும் லாபம் தராது என்பது ஏற்கனவே தமிழ்சினிமாவில் பல உதாரணங்கள் உள்ளன. அந்த வகையில் பிகில் திரைப்படம் அதற்கு இன்னொரு உதாரணம்.

நல்ல கதையம்சம், அருமையான மேக்கிங் தான் ஒரு படத்திற்கு முக்கியமே தவிர பிரமாண்டம் என்பது தமிழ் சினிமாவுக்கு தேவையே இல்லை. அவதார் போல் அதிக பட்ஜெட்டில் எடுப்பதாக கூறப்படும் படங்கள் அனைத்துமே நஷ்டத்தை தான் சந்தித்துள்ளன. இதோ ஒரு பெரிய ஊடகம் கொடுத்திருக்கும் விஸ்வாசம், நேர் கொண்ட பார்வை, பேட்ட மற்றும் பிகில் படங்களின் பட்ஜெட் மற்றும் வசூல் நிலவரம். இதில் இருந்து எந்த படம் வசூல் அளவில் வெற்றிப்படம் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்

விஸ்வாசம்: பட்ஜெட் 90 கோடி- தமிழக வசூல் 145 கோடி, மொத்த வசூல் – 206 கோடி

நேர்கொண்டபார்வை: பட்ஜெட் 40 கோடி – தமிழக வசூல் 90 கோடி, மொத்த வசூல் – 166 கோடி

பேட்ட: பட்ஜெட் 150 கோடி – தமிழக வசூல் 115 கோடி, மொத்த வசூல் – 210 கோடி

பிகில் பட்ஜெட் 180 கோடி தமிழக வசூல் 95 கோடி, மொத்த வசூல் 180 கோடி

Leave a Reply